யோஷித இராணுவத்தில் இணைந்ததாலேயே போரில் வெற்றி! மொட்டுக் கட்சியின் முக்கிய புள்ளி அறிவிப்பு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச இராணுவத்தில் இணைந்ததன் காரணமாகவே, போரில் வெற்றிபெற முடிந்தது என்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.பி. ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
யோஷித ராஜபக்ச இராணுவத்தில் இணைந்தத பிறகு அதுவரை இராணுவத்தில் இணையாதிருந்த இளைஞர்கள் அனைவரும் நாட்டைப் பாதுகாக்க முன்வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊடக சந்திப்பொன்றில் உரையாற்றிய அவர், ராஜபக்சக்களுக்கு எதிராகப் போராடுவதற்கு இராணுவத்தை பகடைக்காயாக பயன்படுத்துவது தவறானது என்று கூறியுள்ளார்.
போரில் வெற்றி
யோஷித ராஜபக்ச செய்ததாகக் கூறப்படும் தவறுகளைச் சுட்டிக்காட்டுபவர்கள், வேறு எத்தனையோ பேர் செய்த தவறுகளைக் கவனிப்பதில்லை என சி.பி. ரத்நாயக்க குற்றஞ்சாட்டியுள்ளார்.

அவர் மேலும் பேசுகையில், நாட்டில் போர் உச்சக்கட்டிலிருந்த போது, மகிந்த ராஜபக்ச நாட்டின் ஜனாதிபதியாகவும் முப்படைகளின் தளபதியாகவும் இருந்துகொண்டு, தனது சொந்த மகனை இராணுவத்தில் ஒப்படைத்தார் என்பதை நினைவூட்டியுள்ளார்.
அத்தோடு, ஜனாதிபதியின் மகனே இராணுவத்தில் இணையும் போது, தங்களுக்கும் அங்கு பாதுகாப்பு இருக்கும் என்ற நம்பிக்கை இளைஞர்களிடையே ஏற்பட்டதாகவும், இந்தச் சிந்தனை மாற்றமே இறுதியாகப் போரில் வெற்றி பெறுவதற்கான பிரதான வாய்ப்பை உருவாக்கியது என்றும் ரத்நாயக்க வலியுறுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |