கட்டுநாயக்காவில் அதிரடியாக கைது செய்யப்பட்ட இருவர்
இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியாவின் சிட்னிக்கு விமானம் மூலம் கொண்டு செல்லவிருந்த 14 மாணிக்கக் கற்களை திருடிய கட்டுநாயக்க விமான நிலைய ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மத்திய தபால் பரிவர்த்தனை அதிகாரிகளினால் விமான நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட இந்த இரத்தினக் கற்கள் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி அவுஸ்திரேலியாவிற்கு கொண்டு செல்லப்பட இருந்ததாககாவல்துறையினர் தெரிவித்தனர்.
காவல்துறையினரால் விசாரணை
இது தொடர்பில் அவுஸ்திரேலிய பெடரல் காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில், கட்டுநாயக்க விமான நிலைய காவல்துறையினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
விமான நிலையத்தில் உள்ள ஏர்மெயில் சேமிப்பு அறையில் இருந்த சிசிடிவி காட்சிகளில், இரண்டு ஊழியர்கள் இஇரத்தினக் கற்களை திருடிச் சென்றது தெரியவந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
திருடப்பட்ட மாணிக்கக் கற்களும்
சந்தேகநபர்கள் விமான நிலைய காவல்துறையால் நேற்று (மே 14) கைது செய்யப்பட்ட நிலையில், திருடப்பட்ட மாணிக்கக் கற்களும் மீட்கப்பட்டுள்ளன.
சந்தேகநபர்கள் 23 மற்றும் 25 வயதுடைய தோலங்கமுவ மற்றும் ஹசலக்க பிரதேசத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்