பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்த கும்பல் : சுற்றிவளைத்து பிடித்த விசேட அதிரடிப்படை
நீண்டகாலமாக பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள்களை விநியோகித்து வந்த இரு சந்தேக நபர்களிடம் இருந்து ஐஸ் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
அம்பாறை(ampara) மாவட்டம் கல்முனை தலைமையக காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் வெள்ளிக்கிழமை (03) இரவு கல்முனை விசேட அதிரடிப் படையினர் ஐஸ் போதைப்பொருளுடன் இருவரை கைது செய்துள்ளனர்.
கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல்
கல்முனை விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது 20 வயது மற்றும் 19 வயது மருதமுனை பகுதியை சேர்ந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்கள் வசமிருந்து மொத்தமாக 2460 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருட்கள் மீட்கப்பட்டிருந்தன.
கைதான சந்தேக நபர்கள்
அத்துடன் கைதான சந்தேக நபர்கள் உள்ளிட்ட சான்றுப்பொருட்கள் சட்டநடவடிக்கைக்காக கல்முனை தலைமையக காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை கல்முனை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |