சாரதி, நடத்துனர் மீது கத்திக்குத்து தாக்குதல்.! பதுளையில் பயங்கரம்: இருவர் கைது
பதுளையில் இ.போ.ச பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய தனியார் பேருந்து சாரதியும், நடத்துனரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் நேற்று (26) மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
பதுளையில் இருந்து முத்தேட்டுகமைக்கு செல்லும் தனியார் பேருந்தின் சாரதி, நடத்துனர் மற்றும் அதே பகுதிக்கு செல்லும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் ஆகியோருக்கிடையில் நேர அட்டவணை தொடர்பில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் கைகலப்பாக மாற, தனியார் பேருந்தின் சாரதி, இபோச பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர்மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தியுள்ளார், காயமடைந்த இருவரும் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இது தொடர்பான மேலதிக செய்திகளை இன்றைய காலை நேர செய்தித் தொகுப்பில் காண்க
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |