மீட்டியாகொட – பண்டாரகம துப்பாக்கிச் சூடு: சிக்கிய இளைஞர்கள்
நாட்டில் இரு வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று (02) இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், மீட்டியாகொட மற்றும் பண்டாரகம காவல் பிரிவுகளில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பாகவே குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விசேட அதிரடிப் படை
இந்தநிலையில், நேற்று முன்தினம் (01) மீட்டியாகொட காவல் பிரிவின் மலவென்ன வீதியில் நபர் ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவத்திற்கு உதவியவராகக் கருதப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் நேற்று (02) மாலை தலவாக்கலை காவல் பிரிவில் காவல்துறை விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் லிந்துலையைச் சேர்ந்த 31 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
மற்றுமொரு கைதாக ஒகஸ்ட் 21 ஆம் திகதி பண்டாரகம காவல் பிரிவின் பொல்கொட பாலத்திற்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உடந்தையாக இருந்த 23 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாணந்துறை ஹிரண பகுதியில் களுத்துறை குற்றப்பிரிவு அதிகாரிகளால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர்களிடம் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
