யாழில் செம்மணியை புறக்கணித்த அநுர - பின்னணி இதுதான்: அம்பலப்படுத்தும் கஜேந்திரகுமார்

Sri Lanka Army Jaffna Gajendrakumar Ponnambalam chemmani mass graves jaffna
By Thulsi Sep 03, 2025 03:35 AM GMT
Report

யாழ்ப்பாணம் (Jaffna) வருகை தந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிடாமல் சென்றதும் அது தொடர்பில் தெரிவித்த கருத்தும் இலங்கை தீவில் தமிழருக்கு நீதி கிடைக்கப் போவதில்லை என்ற உண்மையை மேலும் உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

செம்மணிப் பகுதியில் நேற்று (02.09.2025) செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொள்வதற்கு முன்னதாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு  குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி மனித புதைகுழி இலங்கை தீவில் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட பாரிய ஒரு இனப்படுகொலையின் சாட்சியாக விளங்குகிறது.

வடக்கில் நினைவேந்த அனுமதித்து விட்டு இராணுவத்தை வேட்டையாடும் அரசு - சீறும் நாமல்

வடக்கில் நினைவேந்த அனுமதித்து விட்டு இராணுவத்தை வேட்டையாடும் அரசு - சீறும் நாமல்

மனித குலத்துக்கு எதிரான போர் குற்றங்கள்

இவ்வாறான நிலையில் தற்போதைய அரசாங்கம் உண்மையை கண்டறிவது மட்டும் போதும் அவர்களுக்கு எதிராக தண்டனை வழங்குவதை தவிர்க்கும் செயற்பாட்டில் கடந்த அரசாங்கங்களைப் போல் இந்த அரசாங்கமும் செயலபட்டு வருகிறது.

யாழில் செம்மணியை புறக்கணித்த அநுர - பின்னணி இதுதான்: அம்பலப்படுத்தும் கஜேந்திரகுமார் | Chemmani Mass Grave Site And Anura Jaffna Visit

தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள், போர் குற்றங்கள் என்பன தொடர்பில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்காமல் தொடர்ச்சியாக பாதுகாக்கப்பட்டு வருகின்றது.

தற்போது செம்மணியில் எலும்புக்கூடுகள் 200 ஐ தாண்டிய நிலையில் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையின் கோர வடிவமாக செம்மணி மனிதப் புதைகுழி காணப்படுகிறது.

யாழ்பாணம் வருகை தந்த ஜனாதிபதி அநுர செம்மணியை பார்வையிடாமல் சென்றது பௌத்த சிங்கள பேரினவாத ஆட்சியின் வடிவமாகவே பார்க்க வேண்டியுள்ளது.

யாழ். விஜயத்தில் புலனாய்வு அதிகாரிகளை அதிர வைத்த ஜனாதிபதி அநுர

யாழ். விஜயத்தில் புலனாய்வு அதிகாரிகளை அதிர வைத்த ஜனாதிபதி அநுர

கடிதம் எழுதுவது முட்டாள்தனமான செயற்பாடு

70 வருடங்களாக ஆட்சி செய்த அரசாங்கங்கள் எதை செய்தார்களோ அவற்றையே ஜேவிபி என்கின்ற தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தற்போதைய ஆட்சியிலும் பின்பற்றி வருகிறது.

யாழில் செம்மணியை புறக்கணித்த அநுர - பின்னணி இதுதான்: அம்பலப்படுத்தும் கஜேந்திரகுமார் | Chemmani Mass Grave Site And Anura Jaffna Visit

இப்படிப்பட்ட அரசாங்கத்தின் தலைவராக இருக்கின்ற ஜனாதிபதி அநுரகுமாரவுக்கு எம்மில் சிலர் செம்மணி விவகாரத்தில் நீதி நிலைநாட்ட உதவ வேண்டுமென கடிதம் எழுதுவது முட்டாள்தனமான செயற்பாடு என தற்போது விளங்கு இருக்கும்.

ஆகவே சிங்கள ஆட்சியாளர்களால் செம்மணி மட்டுமல்ல தமிழர் பகுதிகளில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைகள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அடுத்து செல்வதே தீர்வுக்கு வழிவகுக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

வடக்கில் நினைவேந்த அனுமதித்து விட்டு இராணுவத்தை வேட்டையாடும் அரசு - சீறும் நாமல்

வடக்கில் நினைவேந்த அனுமதித்து விட்டு இராணுவத்தை வேட்டையாடும் அரசு - சீறும் நாமல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்