யாழில் ஆயிரக்கணக்கான போதை மாத்திரைகளுடன் சுற்றிவளைக்கப்பட்ட இளைஞர்கள்
யாழில் (Jaffna) 1600 போதை மாத்திரைகளுடன் இருவர், மானிப்பாய் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை யாழ் சுதுமலை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், “மானிப்பாய் காவல்துறையினருக்கு கிடைத்த புலனாய்வு தகவலுக்கமைய மானிப்பாய் காவல் நிலைய பொறுப்பதிகாரி ஜெயந்த குணதிலகவின் வழிகாட்டுதலில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
போதை மாத்திரை
இந்தநிலையில், சுதுமலை பகுதிக்கு விரைந்த காவல்துறையினர் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் இருவரை வழிமறித்து சோதனையிட்டுள்ளனர்.
இதன் பொழுது இருவகையினை சேர்ந்த 1600 போதை மாத்திரைகளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

இதையடுத்து, கொக்கோவில் பகுதியை சேர்ந்த 21 மற்றும் 22 வயது மதிக்கத்தக்க இரண்டு இளைஞர்களை கைது செய்துள்ளனர்.
தொடர்ந்து, இன்றைய தினம் (02) மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் அவர்களை முற்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா 2025
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 2 நாட்கள் முன்