யாழில் சட்டவிரோத போதைப் பொருட்களுடன் இருவர் கைது!
Sri Lanka Police
Jaffna
Drugs
By Sathangani
யாழ்ப்பாணத்தில் சட்டத்திற்கு புறம்பாக தயாரிக்கப்பட்ட கசிப்பு மற்றும் கஞ்சா கலந்த மாவா பாக்குடன் இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று (20) முற்பகல் ஆனைக்கோட்டை மூன்றாம் கட்டைப் பகுதியில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
போதைப் பொருட்கள்

சந்தேக நபர்களிடமிருந்து ஆயிரத்து 500 மில்லி லீற்றர் கசிப்பு மற்றும் 21 கிராம் 450 மில்லிகிராம் கஞ்சா கலந்த மாவா போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணம் பிராந்திய சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகரின் கீழ் இயங்கும் காவல்துறை புலனாய்வு பிரிவினரே இந்தக் கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
சந்தேக நபர்கள் இருவரும் யாழ்ப்பாணம் தலைமையக காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.