தென்னிலங்கையில் சம்பவம் - போதைப்பொருளுடன் இருவர் கைது
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த இரண்டு சந்தேக நபர்கள் போதைப்பொருட்களுடன் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை நீர்கொழும்பு - கட்டுவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் கல்கிசை மற்றும் உடுகம்பொல பகுதிகளைச் சேர்ந்த 29 மற்றும் 31 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணை
நீர்கொழும்பு பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகள் குழுவினர் முன்னெடுத்த விசாரணையின் போது கிடைத்த தகவலுக்கு அமைவாக இந்தச் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது, சந்தேக நபர்களிடமிருந்து 1 கிலோகிராம் 34 கிராம் ஹேஷ் போதைப்பொருள், 7 கிராம் 420 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 8 கிராம் 860 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் ஆகியவை காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவற்றுக்கு மேலதிகமாக, போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 351,200 ரூபாய் பணமும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட இரண்டு கார்களும் காவல்துறையினரால் கண்டறியப்பட்டுள்ளன.
இச்சம்பவம் நீர்கொழும்பு காவல்துறையினர் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |