சுரேஷ் சாலே தொடர்பில் நீதிமன்றின் அதிரடி உத்தரவு
Colombo Hospital
Law and Order
Suresh Salley
By Jaso
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணையில் தடுப்புக் காவல் உத்தரவுகளின் கீழ் விசாரிக்கப்பட்டு வரும் முன்னாள் அரச புலனாய்வு சேவை பணிப்பாளர் சுரேஷ் சாலேவின் உடல்நிலை குறித்தும், அவர் தேசிய மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டுமா என்பது குறித்தும் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு தேசிய மருத்துவமனையின் பணிப்பாளருக்கு கோட்டை நீதவான் பாசன் அமரசேன இன்று (02) உத்தரவிட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான சட்டத்தரணி ஒக்ஸ்ஃபோர்ட் பெரேரா விடுத்த கோரிக்கையைப் பரிசீலித்த பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி