இந்தோனேசியாவில் உணவு நஞ்சாகியதால் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி
இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில், அரசாங்கத்தின் இலவச உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட உணவை உண்ட 500-க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் உணவு ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் கிழக்கு ஜாவாவின் சிடோஆர்ஜோ பகுதியில் அமைந்துள்ள இஸ்லாமிய குடியிருப்புப் பாடசாலையில் நேற்று (01.09.2026) இடம்பெற்றுள்ளது.
இது குறித்த விசாரணையில் தெரியவருகையில், மதிய உணவு சாப்பிட்ட பின்னரே குறித்த மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக இந்தோனேசிய தேசிய ஊட்டச்சத்து முகவர் நிலைய அதிகாரி கெதுத் சுமேதான தெரிவித்துள்ளார்.
500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிப்பு
மேலும் பாதிக்கப்பட்ட மாணவர்களில் சுமார் 80 குழந்தைகள் பல்வேறு வைத்தியசாலைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உணவு விநியோகம் செய்த சந்தேகத்திற்குரிய சமையலறை 30 நாட்களுக்குத் தற்காலிகமாக மூடப்பட்டு, அதிகாரிகளால் தீவிர விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்தோனேசிய ஜனாதிபதி பிரபோவோ சுபியான்டோ நாட்டிலுள்ள கோடிக்கணக்கான சிறுவர்களின் ஊட்டச்சத்து முறைகேட்டை ஒழிப்பதற்காகப் பல பில்லியன் டொலர் செலவில் இந்த இலவச உணவுத் திட்டத்தைத் தொடக்கி வைத்தார்.
'Network for Education Watch' அமைப்பின் தரவுகளின்படி, கடந்த ஆகஸ்ட் மாதம் 08 ஆம் திகதி நிலவரப்படி இத்திட்டம் தொடர்பான 37,600 உணவு ஒவ்வாமை தொடர்பான சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இந்த நிலையில் முறையற்ற உணவு சேமிப்பு மற்றும் தாமதமான விநியோகமே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்காவில் H-1B விசா வைத்திருப்பவர்களுக்கு பேரிடியான அறிவிப்பு! ட்ரம்ப் நிர்வாகம் எடுக்கவுள்ள முடிவு
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |