பழச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு வெளியான நற்செய்தி!
பழச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு காப்புறுதி திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பழச் செய்கையின் போது ஏற்படும் அபாயங்கள் மற்றும் சேதங்களில் இருந்து விவசாயிகளைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
விவசாய, கால்நடை வளர்ப்பு, காணிகள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் கீழ் இயங்கும் விவசாய மற்றும் விவசாயக் காப்புறுதிச் சபையினால் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
முதன்மை நோக்கம்
இதனடிப்படையில் விவசாயத் திணைக்களத்தினால் பரிந்துரைக்கப்பட்ட அன்னாசி, பப்பாளி மற்றும் வாழைப்பழம் உள்ளிட்ட பழப் பயிர்களுக்கு இக்காப்புறுதித் திட்டத்தின் கீழ் விவசாயிகள் காப்பீடு பெற்றுக்கொள்ள முடியும்.
அடிப்படை காப்பீட்டுத் தொகையில் 7 சதவீதத்தை பிரீமியம் தொகையாகச் செலுத்துவதன் மூலம் விவசாயிகள் இக் காப்புறுதிப் பாதுகாப்பைப் பெறலாம்.

இயற்கை பேரழிவுகள், நோய்கள், பூச்சித் தாக்குதல்கள் மற்றும் காட்டு யானைகளால் ஏற்படும் பயிர்ச் சேதங்களுக்கு இத்திட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்கப்படும்.
பயிர்ச்சேதம் ஏற்படும் சந்தர்ப்பங்களில் விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு 300,000 ரூபா முதல் 400,000 ரூபா வரை இழப்பீடு பெறத் தகுதி உரித்தாகும் என விவசாயக் காப்புறுதிச் சபை தெரிவித்தது.
விவசாய அபாயங்களை நிர்வகிக்க விவசாயிகளுக்கு உதவுவதும் பழச் செய்கையில் தொடர்ந்து ஈடுபட அவர்களை ஊக்குவிப்பதுமே இத்திட்டத்தின் முதன்மை நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ். பல்கலையில் நியமனத்தின் போது புறக்கணிக்கப்பட்ட அலுவலக உதவியாளர்கள்! முன்வைத்துள்ள குற்றச்சாட்டு
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 17