அமெரிக்காவுக்கு ஈரான் கடும் பதிலடி - 96 டொலர்களை தாண்டிய கச்சா எண்ணெய் விலை
2026 ஜூன் 8 ஆம் திகதிக்குப் பின்னர் முதன்முறையாக பிரென்ட் கச்சா எண்ணெய் பெரல் ஒன்றுக்கு 96 அமெரிக்க டொலர்களை கடந்துள்ளது.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான கடுமையான பதிலடி மோதல்களின் காரணமாக சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை கடுமையாக அதிகரித்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணையில் இராணுவ நிலைமை மோசமடைந்ததன் காரணமாக உலகளாவிய எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்ட இடையூறுகளே இந்த விலை அதிகரிப்புக்கு முக்கிய காரணம் என்று பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மசகு எண்ணெய்யின் விலை
இன்றைய (02) நிலவரப்படி, ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை கடந்த சனிக்கிழமை 88.10 அமெரிக்க டொலராக இருந்த நிலையில், இன்று கிட்டத்தட்ட 96 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.

அதேபோல், WTI ரக மசகு எண்ணெய்யின் விலை பீப்பாய் ஒன்றின் விலையும் கடந்த சனிக்கிழமை 83.40 அமெரிக்க டொலராக இருந்த நிலையில், இன்று 91 அமெரிக்க டொலராகக்கும் மேல் அதிகரித்துள்ளது.
மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் பதற்றம், ஹோர்முஸ் ஜலசந்தி வழியிலான கப்பல் போக்குவரத்தில் ஏற்படும் தடைகள் மற்றும் பாரசீக வளைகுடா நாடுகளில் இருந்து எண்ணெய் விநியோகம் குறைதல் ஆகியவற்றின் காரணமாக, நடப்பு ஆண்டின் நான்காவது காலாண்டில் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை பெரல் ஒன்றுக்கு 120 டொலரைக் கடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விமானப்படைத் தளத்தின் மீது தாக்குதல்
இதேவேளை ஜோர்டானில் உள்ள அமெரிக்காவின் பிரின்ஸ் ஹசன் விமானப்படைத் தளத்தின் மீது, நீண்ட தூரம் சென்று தாக்கும் RQ-4 மற்றும் MQ-9 ட்ரோன்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானக் கொட்டகைகளைக் குறிவைத்து, சக்திவாய்ந்த பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியதாக ஈரானின் புரட்சிகர காவல் படை (IRGC) அறிவித்துள்து.

ஈரானிய அரசு ஒளிபரப்பு நிறுவனமான IRIB வெளியிட்ட அறிக்கையில், இத்தாக்குதலில் பல ஆளில்லா விமானங்கள் அழிக்கப்பட்டதுடன், அமெரிக்க விமான மற்றும் தொழில்நுட்பப் பணியாளர்கள் சிலர் கொல்லப்பட்டதாகவும், பல தொழில்நுட்ப உள்கட்டமைப்புகள் தீக்கிரையாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இத்தாக்குதல் குறித்து அமெரிக்காவோ அல்லது ஜோர்டானோ உடனடியாக எந்தவொரு அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலையும் வெளியிடவில்லை எனக் கூறப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 17
அமெரிக்காவில் H-1B விசா வைத்திருப்பவர்களுக்கு பேரிடியான அறிவிப்பு! ட்ரம்ப் நிர்வாகம் எடுக்கவுள்ள முடிவு
தவறான முறைக்கு உட்படுத்தப்பட்ட பெண் உத்தியோகத்தர்! அக்கரைப்பற்று முன்னாள் மேயருக்கு விளக்கமறியல் நீடிப்பு!