வெனிசுலா நிலநடுக்கம்: 3 நாட்கள் தேடுதல் போராட்டத்தின் பின் உயிருடன் மீட்க்கப்பட்ட சிறுவர்கள்
வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் இருந்து இரு 11 வயதுடைய இரண்டு சிறுவர்கள் 3 நாட்களுக்கு பின் சில மணிநேர இடைவெளியில் தனித்தனியாக உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
கடந்த புதன்கிழமை 39 வினாடிகள் இடைவெளியில் ஏற்பட்ட 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவிலான இரு நிலநடுக்கங்களால் நூற்றுக்கணக்கான கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன.
முதல் நிலநடுக்கம் ஏற்பட்டு 85 மணிநேரத்திற்கும் மேலாகியுள்ள போதிலும் இடிபாடுகளுக்குள் உணவு அல்லது தண்ணீர் இருந்தால் மனிதர்கள் உயிர்வாழ முடியும் என்பதால் மீட்புக் குழுவினர் நம்பிக்கையைக் கைவிடாமல் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.
பல்லாயிரக்கணக்கான மக்கள்
தற்போதைய நிலவரப்படி 1,430 மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் பல்லாயிரக்கணக்கான மக்கள் இன்னும் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில் சுமார் 3 மீட்டர் ஆழமான இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த மொய்ஸஸ் என்ற சிறுவனை கொலம்பியாவின் தேசிய பேரிடர் இடர் மேலாண்மை பிரிவு (UNGRD) 6 மணிநேர போராட்டத்திற்குப் பின் சனிக்கிழமை மீட்டுள்ளது.
பல நாட்களாக இருளுக்குள் இருந்ததால் சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்கக் கண்கள் மூடப்பட்டுக் குறித்த சிறுவன் வெளியே கொண்டுவரப்பட்டுள்ளார்.
வெனிசுலாவிற்கான நம்பிக்கை
இருப்பினும் அவரது அருகிலேயே அவரது தாயாரும் சகோதரியும் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த மீட்பு நடந்து சில மணிநேரங்களிலேயே காராபல்லேடா (Caraballeda) நகரில் இடிபாடுகளுக்குள் இருந்து ஸ்ட்ரெச்சரில் வைத்து மற்றொரு 11 வயது சிறுவர் மீட்கப்பட்டுள்ளார்.
Hace pocos minutos fue rescatado con vida un niño de 11 años en Caraballeda. En estas horas cada vida es esperanza para Venezuela. pic.twitter.com/Pjj5ETaaYe
— Delcy Rodríguez (@delcyrodriguezv) June 28, 2026
குறித்த சிறுவரின் காணொளியை நாட்டின் இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் (Delcy Rodríguez) தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் (X) தளத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில் இந்த இக்கட்டான நேரத்தில் ஒவ்வொரு உயிரும் வெனிசுலாவிற்கான நம்பிக்கை என அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல… 9 மணி நேரம் முன்