உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ரவி செனவிரத்ன மீது பகிரங்க குற்றச்சாட்டு

Sri Lanka Law and Order Ravi Seneviratne
By Shalini Balachandran Jun 29, 2026 04:37 AM GMT
Report

உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தடுக்க போதுமான அவகாசம் இருந்தும் அப்போதைய பிரதி காவல்துறை மா அதிபர் ரவி செனவிரத்ன அதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றச்சாட்டொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

கேகாலை மாவட்டத்துக்குப் பொறுப்பாக இருந்த ஓய்வுபெற்ற பிரதி காவல்துறை மா அதிபர் பாலித சிரிவர்த்தன குறித்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

யூடியூப் இணையத்தள சேனல் ஒன்றின் கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா உருவாக்கும் புதிய கடல் வழித்தடம்! ஈரானின் பரபரப்பு குற்றச்சாட்டு

அமெரிக்கா உருவாக்கும் புதிய கடல் வழித்தடம்! ஈரானின் பரபரப்பு குற்றச்சாட்டு

பொதுமக்கள் பாதுகாப்பு 

சமூக ஊடகங்களில் பரவி வரும் குறித்த காணொளியில் தொடர்ந்தும் அவர் தெரிவித்துள்ளதாவது, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்குப் பொறுப்பாக இருந்த அப்போதைய பிரதிப் காவல்துறை மா அதிபரும் தற்போதைய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான செயலாளர் ரவி செனவிரத்ன, உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புகளுக்கு முன்னதாக வெளிநாடு சென்று மீண்டும் திரும்பி வந்து கடமைக்குச் சமூகமளித்த திகதி குறித்து பொய்யான தகவல் ஒன்றைக் கூறிக் கொண்டிருப்பதாக பாலித சிரிவர்த்தன குற்றம் சாட்டியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ரவி செனவிரத்ன மீது பகிரங்க குற்றச்சாட்டு | Allegations Regarding Easter Attack Investigation

ரவி செனவிரத்ன வெளிநாட்டிலிருந்து நாட்டிற்குத் திரும்பி வந்த பின்னர் ஏப்ரல் 16 ஆம் திகதியே பணிக்குத் திரும்பியதாகத் தெரிவித்துக் கொண்டிருப்பதாக பாலித சிரிவர்த்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ். நல்லூருக்கு செல்லும் வீதியிலும் புதிய மனிதப் புதைகுழிகள் - வெளியான அதிர வைக்கும் தகவல்

யாழ். நல்லூருக்கு செல்லும் வீதியிலும் புதிய மனிதப் புதைகுழிகள் - வெளியான அதிர வைக்கும் தகவல்

உரிய நடவடிக்கைகள்

இருப்பினும் அவர் ஏப்ரல் 13 ஆம் திகதியே பணிக்குத் திரும்பினார் என்பதற்கான ஆதாரங்களை பாலித சிறிவர்தன குறித்த காணொளியில் தெளிவாக முன்வைத்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ரவி செனவிரத்ன மீது பகிரங்க குற்றச்சாட்டு | Allegations Regarding Easter Attack Investigation

ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெற்ற நிலையில் அவர் ஏப்ரல் 13 ஆம் திகதியிலிருந்தே பணியில் இருந்திருந்த காரணத்தினால் தாக்குதலைத் தடுக்க உரிய நடவடிக்கைகளை எடுக்கப் போதுமான கால அவகாசம் இருந்திருந்தது என்றும் பாலித சிரிவர்த்தன தர்க்கரீதியாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் முன்னாள் பிரதிக் காவல்துறை மா அதிபர் பாலித சிரிவர்த்தனவின் கருத்துக் குறித்து தற்போதைய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன எதுவித கருத்தையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உக்ரைனின் அமைதித் திட்டத்தை நிராகரித்தது ரஷ்யா! புடினின் அதிரடி அறிவிப்பு

உக்ரைனின் அமைதித் திட்டத்தை நிராகரித்தது ரஷ்யா! புடினின் அதிரடி அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020