ஐஸ் போதைப்பொருளுடன் சகோதரர்கள் இருவர் கைது!
Srilanka
arrested
Chunnakam
Two brothers
ice drugs
By MKkamshan
சுன்னாகம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட ஏழாலை பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் 22 மற்றும் 29 வயதுடைய சகோதரர்களான சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், இராணுவ புலனாய்வு பிரிவினரும் சுன்னாகம் காவல்துறையினரும் இணைந்து இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இதன்போது 3 கிராம் 58 மில்லிக்கிராம் ஐஸ் போதை கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

