இலங்கையில் தங்கியிருந்த வெளிநாட்டு பிரஜைகள் இருவர் கைது
srilanka
police
arrested
foreign nationals
By Sumithiran
செல்லுபடியாகும் வீசா இன்றி நாட்டில் தங்கியிருந்த இரு வெளிநாட்டு பிரஜைகள் நேற்று (ஜன. 22) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 59 வயதுடைய ஆணும் 45 வயதுடைய பெண்ணும் எனவும் இருவரும் சீனர்கள் எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஏத்துகல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்ட சீன பிரஜைகள் இருவரும் நீர்கொழும்பு காவல்துறையில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
நீர்கொழும்பு காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
