நோயாளிகள் முன்னிலையில் மோதலில் ஈடுபட்ட வைத்தியர்கள் -இருவரும் படுகாயம்
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் இரண்டு வைத்தியர்கள் நேற்று முன்தினம் (19) பிற்பகல் இடம்பெற்ற கைகலப்பு காரணமாக படுகாயமடைந்து அதே வைத்தியசாலையின் இரண்டு விடுதிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் விசேட வைத்தியர் மற்றும் பொது வைத்தியர் ஒருவரும் இவ்வாறு மோதிய நிலையில் காயமடைந்ததால் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடமை தொடர்பாக நீண்ட நாட்களாக நிலவி வந்த பிரச்சனை
கடமை தொடர்பாக நீண்ட நாட்களாக நிலவி வந்த பிரச்சனையால் இருவருக்கும் இடையே வார்த்தைப் பரிமாற்றம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் திட்டமிடல் அலுவலகத்திற்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இரண்டு வைத்தியர்களும் படுகாயம்
இந்த இரண்டு வைத்தியர்களும் நேற்று பிற்பகல் வரை வைத்தியசாலையின் விடுதி இலக்கம் 20 மற்றும் 11 இல் சிகிச்சை பெற்று வருவதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
மேலும், மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் முன்னிலையிலேயே இந்த சம்பவம் நடந்துள்ளது தெரியவந்துள்ளது.
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)