சிறிலங்கா ஏர்லைன்ஸில் அடுத்தடுத்து இரண்டு மோசடிகள்! வெளியாகிய அதிர்ச்சி தகவல்

SriLankan Airlines Chennai Sri Lankan Peoples United Arab Emirates
By Dhilak May 17, 2026 02:26 AM GMT
Report

அண்மையில் ஊடகங்களில் வெளியான இரண்டு வெவ்வேறு நிதி மோசடிகள் தொடர்பான செய்திகள் குறித்து சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் உத்தியோகபூர்வமாக விளக்கமளித்துள்ளது.

அதன்படி, முதலாவது சம்பவத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் உள்ள சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் சேவை வழங்குநர் ஒருவருக்குச் சேர வேண்டிய AED 974,000 (ஐக்கிய அரபு அமீரக திர்ஹம்) தொகை அந்த நிறுவனத்திற்குக் கிடைக்கப் பெறவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முதற்கட்ட விசாரணைகளின்படி, தேவையற்ற மூன்றாம் தரப்பு நபர் ஒருவர் அந்தச் சேவை நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் கணக்கைச் சட்டவிரோதமாகப் பயன்படுத்தி, அவர்களின் வங்கி கணக்கு விபரங்களையும் ஆவணங்களையும் மாற்றியமைத்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

நீங்கள் மட்டும் பேசாதீர்கள்! எதிர்க்கட்சித் தலைமை ஒன்றிடம் நேரில் எச்சரித்த எம்.பி.க்கள் குழு

நீங்கள் மட்டும் பேசாதீர்கள்! எதிர்க்கட்சித் தலைமை ஒன்றிடம் நேரில் எச்சரித்த எம்.பி.க்கள் குழு

போலி வங்கிக் கணக்கு

இதன் காரணமாக, மாற்றப்பட்ட போலி வங்கிக் கணக்கையே உண்மையான கணக்கு என நம்பி சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் பணத்தை அனுப்பியுள்ளது.

சிறிலங்கா ஏர்லைன்ஸில் அடுத்தடுத்து இரண்டு மோசடிகள்! வெளியாகிய அதிர்ச்சி தகவல் | Two Financial Scams At Srilankan Airlines

இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்தவுடன், அந்த வங்கிக் கணக்கிற்கான அடுத்தடுத்த பரிவர்த்தனைகளை நிறுவனம் உடனடியாக நிறுத்தியுள்ளதுடன், இது குறித்து ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளிடமும், இலங்கையின் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடமும் (CID) முறையான முறைப்பாடுகளை அளித்து விசாரணைகளைத் தொடங்கியுள்ளது.

இதேவேளை, இந்தத் தவறு சேவை வழங்குநரின் மின்னஞ்சல் பாதுகாப்பு குறைபாட்டால் ஏற்பட்டுள்ளதால், இதற்குத் தங்களால் பொறுப்பேற்க முடியாது என்றும் சிறிலங்கன் ஏர்லைன்ஸ் தெளிவுபடுத்தியுள்ளது.

மேலும், இந்தியாவின் சென்னையில் உள்ள சிறிலங்கன் ஏர்லைன்ஸ் அலுவலகத்தில் பணியாற்றிய நிதித்துறை ஊழியர்கள் சிலர், 22 மில்லியன் இந்திய ரூபாய் நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. 

ஊழியர்கள் தலைமறைவு

அங்கு பணிபுரிந்த இந்திய ஊழியர்கள் சிலர் போலி இன்வாய்ஸ்கள், போலி கட்டண விவரங்கள் மற்றும் போலிக் கையெழுத்துகளை உருவாக்கி இந்த மோசடியைச் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிறிலங்கா ஏர்லைன்ஸில் அடுத்தடுத்து இரண்டு மோசடிகள்! வெளியாகிய அதிர்ச்சி தகவல் | Two Financial Scams At Srilankan Airlines

கொழும்பில் உள்ள தலைமை அலுவலகம் நடத்திய வழக்கமான கணக்காய்வின் போதே இந்த முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டு, உடனடியாக உள்நாட்டு விசாரணையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

மேற்படி, விசாரணை தொடங்கப்பட்டதிலிருந்து சம்பந்தப்பட்ட ஊழியர்கள் பணிக்கு வருவதைத் தவிர்த்து தலைமறைவாகியுள்ளதகாவும் கூறப்படுகிறது.

தற்போதைய நிலையில் அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதோடு, இந்தியக் காவல் துறையிலும் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, இந்த மோசடியால் நிறுவனத்திற்கு ஏற்பட்ட நிதி இழப்பை முழுமையாக மீட்பதற்கான அனைத்து அவசியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

மாவீரர் வாரத்தில் மகிந்தவுக்கு தீங்கு விளைவிக்க திட்டமாம்! இப்படி கூறும் மனோஜ் கமகே

மாவீரர் வாரத்தில் மகிந்தவுக்கு தீங்கு விளைவிக்க திட்டமாம்! இப்படி கூறும் மனோஜ் கமகே

இலங்கையில் நீதிமன்றங்களில் தேங்கிக்கிடக்கும் மில்லியன் கணக்கான வழக்குகள்

இலங்கையில் நீதிமன்றங்களில் தேங்கிக்கிடக்கும் மில்லியன் கணக்கான வழக்குகள்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026