காசாவில் இஸ்ரேல் படைக்கு ஏற்பட்ட இழப்பு : பலி எண்ணிக்கை அதிகரிப்பு
Israel-Hamas War
Gaza
By Sumithiran
காசா பகுதியில் ஹமாஸுக்கு எதிரான போரில் இரண்டு வீரர்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை புதன்கிழமை அறிவித்தது.
வடக்கு காசாவில் செவ்வாய்க்கிழமை நடந்த சண்டையில் இரண்டு அதிகாரிகள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை அறிவித்தது.
ஏழு வீரர்கள் படுகாயமடைந்துள்ளதாக
இதே சம்பவத்தில் ஜாபர் பட்டாலியனின் மேலும் ஏழு வீரர்கள் படுகாயமடைந்துள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
செவ்வாயன்று காசா நகரின் ஜெய்டவுன் சுற்றுப்புறத்தில் கண்ணி வெடி வெடித்ததில் ஷஹர் மற்றும் சீஃப் ஆகிய இரண்டு வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் ஏழு வீரர்கள் காயமடைந்தனர்.
உயிரிழந்த படையினரின் எண்ணிக்கை அதிகரிப்பு
இதன்படி ஹமாஸுக்கு எதிரான தாக்குதலில் உயிரிழந்த இஸ்ரேல் படையினரின் எண்ணிக்கை242 ஆக உயர்ந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 நாள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
5 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி