காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி
Sri Lanka Police
Kalutara
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Sathangani
களுத்துறை மாவட்டத்தின் மொரகஹஹேன பிரதேசத்தில் காவல்துறையினரின் உத்தரவை மீறி பயணித்த முச்சக்கர வண்டி மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இச் சம்பவத்தில் முச்சக்கரவண்டிக்குள் இருந்த இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை, முச்சக்கரவண்டிக்குள் இருந்த மற்றுமொருவர் தப்பியோடியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
காவல்துறையினர் விசாரணை
இச் சம்பவம் நேற்று (22) இரவு மொரகஹஹேன, மிரிஸ்வத்த பகுதியில் உள்ள டயர் தொழிற்சாலைக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள். |
மரண அறிவித்தல்