மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் கோடாரி தாக்குதல்! குடும்பஸ்தர் ஒருவர் கவலைக்கிடம்
Sri Lanka Police
Sri Lanka
Sri Lankan Peoples
By Kiruththikan
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை திக்கம் பகுதியில் ஒருவர் கோடரியால் தாக்கப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரால் இன்று (23) இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
தாக்குதலை மேற்கொண்டவர்கள் தப்பிச்சென்றுள்ளதாகவும் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
தாக்குதலில் படுகாயமடைந்தவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
திக்கம் பகுதியை சேர்ந்த 44 வயதான ஒருவரே கோடரியால் தாக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

4ம் ஆண்டு நினைவஞ்சலி