பிரித்தானியாவில் ஈரானின் சதித்திட்டம் முறியடிப்பு: அமெரிக்க விமானப் படைத்தளத்தில் இருவர் கைது
பிரித்தானியாவின் ஃபேர்ஃபோர்ட் (Fairford) நகரில் அமெரிக்கப் படைகளால் பயன்படுத்தப்பட்டு வரும் ராயல் எயர் ஃபோர்ஸ் (RAF) இராணுவ விமானப் படைத்தளத்தை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட சந்தேகத்திற்கிடமான சதித்திட்டம் தொடர்பாகப் பிரித்தானியப் பிரஜைகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சதித்திட்டம் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையினால் (IRGC) நிச்சயமாக வழிநடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை பிரித்தானியப் பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் (Andy Burnham) தெரிவித்துள்ளார்.
உளவு அமைப்பு
ஃபேர்ஃபோர்ட் விமானப் படைத்தளத்தில் கடந்த செப்டம்பர் 27 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் தொடர்பில் 24 வயதுடைய பிரித்தானியப் பிரஜை ஒருவரும் மற்றும் 25 வயதுடைய பிரித்தானிய-ஈரானிய இரட்டைப் குடியுரிமை கொண்ட ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டு உளவுச் சேவைக்குத் துணைபுரிந்தனர் என்ற கடுமையான சந்தேகத்தின் பேரிலேயே பயங்கரவாத எதிர்ப்பு காவல்துறையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் வழக்கு தொடர்பான ஆதாரங்களைத் திரட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகப் பிரித்தானியத் தேசிய பயங்கரவாத எதிர்ப்புப் காவல்துறை தலைவர் தெரிவித்துள்ளார்.
ஆரம்பக்கட்ட விசாரணைகளின்படி, இச்சம்பவத்தில் ஈரானிய அரசாங்கம் அல்லது அதன் உளவு அமைப்புகளின் நேரடித் தொடர்பு இருப்பதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளதாகப் காவல்துறையினர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |