அக்கரைப்பற்றில் நள்ளிரவில் பதற்றம்..! சிறுவர்கள் ஓட்டிய காரொன்றினால் கோர விபத்து
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Accident
By Shalini Balachandran
Courtesy: Nayan Nayan
அக்கரைப்பற்றில் இரண்டு சிறுவர்கள் செலுத்திய காரொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
மத்திய கல்லூரி அருகில் உள்ள வீதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் சிக்கி இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
ஆபத்தான நிலை
இதையடுத்து, ஆபத்தான நிலையில் இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிறுவர்கள் எவ்வாறு காரை எடுத்துச் சென்றார்கள் என்பது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சிறுவர்களைக் கைது செய்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் உண்மைக் குற்றவாளிகளான சிறுவர்களைக் காப்பாற்ற 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் காவல்துறையினரிடம் வந்து சரணடைந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
உலக இராணுவ வரலாற்றில் பால்ராஜ் ஒரு போரியல் அதிசயம்! ஒரு போர்க்கள ஒப்பீடு 15 மணி நேரம் முன்
4ம் ஆண்டு நினைவஞ்சலி