யாழில் இரண்டு மாதங்களே நிரம்பிய குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்
Jaffna
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
By Dilakshan
யாழ்ப்பாணத்தில் (Jaffna) இரண்டு மாதங்களே நிரம்பிய ஆண் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
நீர்வேலி தெற்கு, நீர்வேலி பகுதியை சேர்ந்த தருண் பிரதீஸ் என்ற குழந்தையே நேற்றையதினம் (15) இவ்வாறு உயிரிழந்துள்ளது.
குறித்த குழந்தைக்கு காய்ச்சலும் சளியும் ஏற்பட்ட நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மரண விசாரணை
இவ்வாறு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் குழந்தை உயிரிழந்துள்ளது.
குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார்.
இந்த நிலையில், நுரையீரலில் கிருமி தாக்கம் ஏற்பட்டதன் காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்