சீன ஆய்வு கப்பலுக்கு மேலும் வழங்கப்பட்ட இரண்டு நாட்கள் அனுமதி
இந்தியாவின் கரிசனையையும் மீறி கொழும்பு துறைமுகத்திற்கு வருவதற்கு அனுமதியளிக்கப்பட்ட சீன ஆராய்ச்சி கப்பல் “ஷி யான் 6" மேலும் இரண்டு நாட்கள் தங்கி நிற்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நான்கு நாட்கள் பயணமாக கடந்த 25 ஆம் திகதி இந்த ஆய்வு கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த நிலையில் இன்று பிற்பகல் நாட்டிலிருந்து புறப்பட்ட இருந்தது.
மேலும் இரண்டு நாட்கள் அனுமதி
இந்த நிலையிலேயே நாளை மறுதினம் திங்கட்கிழமை வரை கொழும்பு துறைமுகத்தில் தங்கி நிற்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கப்பல் வந்ததன் நோக்கம்
இதேவேளை ஷி யான் – 6 (Shi Yan 6) சீன சமுத்திரவியல் ஆய்வுக் கப்பல் எரிபொருள் உள்ளிட்ட தேவைகளைப் பெற்றுக் கொள்வதற்காக மட்டுமே கொழும்பு துறைமுகத்துக்கு வருகை தந்துள்ளதாகவும் இதற்கான அனுமதியையே அரசாங்கம் வழங்கியுள்ளதாகவும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.