இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு மாதுளை இனங்கள் : விளைச்சல் அமோகம்
இரண்டு புதிய வகை மாதுளை இனங்களை விவசாயத் திணைக்களம் கண்டறிந்துள்ளது.
இரண்டு புதிய மாதுளை வகைகளும் இலங்கையில் பயிரிடுவதற்கு ஏற்றது என்றும், அது தொடர்பான தமது முயற்சிகள் வெற்றியடைந்துள்ளதாகவும் விவசாய திணைக்களத்தின் ஆய்வுக் குழு தெரிவித்துள்ளது.
அதிகவிளைச்சல் மற்றும் மிகவும் இனிப்பு சுவை
அதிகவிளைச்சல் மற்றும் மிகவும் இனிப்பு சுவை கொண்ட இந்த இரண்டு மாதுளை வகைகளும் இன்னும் சில மாதங்களில் விவசாய திணைக்களத்தினால் இலங்கையில் பயிர்ச்செய்கைக்கு அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
தற்போது, இறக்குமதி செய்யப்பட்ட மாதுளை வகைகள் சாகுபடிக்கு பரவலாக பயன்படுத்தப்படுகின்றன. மாதுளை விதைகளாகவும் பழங்களாகவும் பயன்படுத்தப்படும் அதிக அளவு மாதுளைகள் இந்தியா மற்றும் பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.
எனவே, ஆண்டுதோறும் அதிக அளவில் அன்னியச் செலாவணி இழப்பை தவிர்க்கும் வகையில், இரண்டு புதிய மாதுளை இனங்களைஅறிமுகப்படுத்த விவசாய திணைக்களம் ஆய்வை மேற்கொண்டது.
அதிக விளைச்சல்
இந்த மரங்களில் ஒன்று எட்டு மாதங்களுக்குள் 10-15 கிலோ வரை விளைச்சல் தரக்கூடியது என்றும், ஒரு மரத்தின் ஆயுட்காலம் 35 ஆண்டுகள் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆண்டு முழுவதும் காய்க்கும் இந்த ரகங்கள், முக்கிய பருவத்தில் அதிக விளைச்சல் தரக்கூடியது என்பது இதுவரை நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் உறுதி செய்யப்பட்டுள்ளது.