வவுனியாவில் கஜமுத்து மீட்பு - இருவர் கைது
Sri Lanka Police
Vavuniya
Sri Lanka Police Investigation
By Beulah
வவுனியா நகரில் நேற்று (10) முன்னெடுக்கப்பட்ட திடீர் சோதனையின் போது கஜமுத்து ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மாங்குளம் விசேட அதிரடி படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே இந்த திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது கார் ஒன்று சோதனைக்கு உட்படுத்தபட்ட வேளை அதில் விற்பனை செய்வதற்கு தயாரான நிலையில் வைக்கப்பட்டிருந்த கஜமுத்து மீட்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை

இதனையடுத்து, காரில் இருந்த 26 மற்றும் 23 வயதுடைய தெஹியந்தர, ஹக்மன பிரதேசங்களைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில், மேலதிக விசாரணைகளுக்காக இவ்விருவரும் வவுனியா வனஜீவராசிகள் பாதுகாப்பு அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
6ம் ஆண்டு நினைவஞ்சலி