கனடாவில் இருவருக்கு விதிக்கப்பட்ட பெருந்தொகை அபராதம்: இதுதான் காரணம்
கனேடிய (Canada) மாகாணமான ஒன்றாரியோவில் (Ontario) சட்டவிரோதமான முறையில் மான் வேட்டையில் ஈடுபட்ட இருவருக்கு பெருந்தொகை அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த இருவருக்கும் மான் வேட்டையாடுவதற்கு அனுமதி வழங்கப்பட்ட போதிலும் காளை கடமானை வேட்டையாட அனுமதி வழங்கப்படவில்லை.
இந்த நிலையில், கடந்த ஒக்டோபர் மாதம் இவர்கள் தவறுதலாக காளை கடமான் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
பத்தாயிரம் டொலர் அபராதம்
இதன் படி, சம்பவத்துடன் தொடர்புடைய தன்டர்பே பகுதியைச் சேர்ந்த ஜோன் பொலிசோக் என்பவருக்கும், ஜொஸ்வா ஸ்டீவன்சன் என்பருக்கும் இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அதன் போது, சட்டவிரோதமான முறையில் வேட்டையாடுதல் மற்றும் சட்டவிரோதமான முறையில் வேட்டையாடிய விலங்கினை வைத்திருத்தல் ஆகிய இரண்டு குற்றச்சாட்டுக்களின் கீழ் இருவருக்கும் சுமார் பத்தாயிரம் டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |