அதி வேகத்துடன் பூமியை நெருங்கும் சிறுகோள்: ஆபத்து தொடர்பில் நாசா வெளியிட்ட தகவல்
NASA
World
By Dilakshan
விமானத்தின் அளவுள்ள 110 அடி விட்டமுள்ள சிறுகோள் ஒன்று பூமியை நெருங்கி வருவதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா (NASA) தெரிவித்துள்ளது.
அதன் படி, 2024 OJ2 என்று பெயரிடப்பட்டுள்ள குறித்த சிறுகோள், மணிக்கு சுமார் 37,510 கி.மீ. வேகத்தில் பூமியை நெருங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த முதலாம் திகதி இரண்டு சிறுகோள் கடந்து விட்டு சென்ற நிலையில், தற்போது மூன்றாவதாக இந்த 2024 OJ2 சிறு கோள் பூமியை நெருங்குவதாக நாசா குறிப்பிட்டுள்ளது.
பூமிக்கு ஆபத்து
எவ்வாறாயினும், இதன் அளவு மற்றும் தூரத்தை வைத்து, இந்த சிறுகோளால் பூமிக்கு எந்த ஆபத்தும் இல்லை நாசா தெரிவித்துள்ளது.
இதேவேளை, 2024 OE மற்றும் 2024 OO என அழைக்கப்படும் இரண்டு சிறுகோள்கள் பூமிக்கு எந்த ஆபத்தும் இல்லாமல் கடந்து சென்று விட்டுள்ளதாக நாசாவின் ஜெட் பிராபல்ஷன் ஆய்வகம் அறிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்