ஏஐ தொழிநுட்பத்தின் வளர்ச்சி: மீண்டும் எச்சரிக்கை விடுக்கும் எலான் மஸ்க்
Elon Musk
SpaceX
Artificial Intelligence
By Aadhithya
ஏஐ (AI) தொழில்நுட்பத்தின் சமீபத்திய வளர்ச்சி தன்னை கவலை கொள்ள செய்வதாக ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) நிறுவனத்தின் நிறுவனர் எலான் மஸ்க் (Elon Musk) தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் அவர் கலந்துக்கொண்ட நேர்காணல் ஒன்றிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அந்தவகையில் சிறிய விடயங்களில் கூட பொய் சொல்லும் அளவுக்கு ஏஐ தொழில்நுட்பம் அறிவூட்டப்பட்டு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
பாரிய விளைவு
குறிப்பாக, தற்போது சிறிய விடயங்களாக இருப்பவை, நாளடைவில் பெரிதாக மாறுமெனவும் மேலும் மக்கள் இதனை அதிகளவு பயன்படுத்த துவங்கும் போது இன்னும் அதிகளவு பொய் சொல்லும் என கூறியுள்ளார்.
மேலும், ஏஐ தொழிநுட்பம் ஏற்படுத்தும் சிறிய தவறுகள் கூட மிகவும் சக்திவாய்ந்ததாக இருப்பதால் அது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்