ஆயிரக்கணக்கானோர் பணிநீக்கம்: இன்டெல் நிறுவனத்தின் அதிரடி முடிவு
உலகின் முன்னணி அமெரிக்க (USA) சிப் (Chip) தயாரிப்பு நிறுவனமான இன்டெல் (Intel) உலகம் முழுக்க தங்களது அலுவலகங்களில் பணியாற்றி வருவோரில் 15 சதவீதம் பேரை பணிநீக்கம் செய்ய அறிவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடப்பு காலாண்டில் சுமார் ஒன்றரை பில்லியன் டொலர் நஷ்டம் ஏற்பட்டமையே இதற்கு காரணமென தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக அந்நிறுவனம் தனது ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், இந்த நடவடிக்கை மூலம் இன்டெல் நிறுவனம் அடுத்த ஆண்டு 10 பில்லியன் டொலர்கள் சேமிக்க முடியும் என்று கூறியுள்ளது.
தொழில்நுட்ப துறை
எதிர்பார்த்த வருவாய் இல்லாதது, ஏஐ (AI) துறையில் முழுமையான பலன்களை அடையாமல் இருப்பது, செலவீனங்கள் அதிகளவில் இருப்பது உள்ளிட்டவை இன்டெல் பணிநீக்க நடவடிக்கைக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, இன்டெல் நிறுவனம் தொழில்நுட்ப துறையின் சிப் உற்பத்தியில் தனது போட்டியாளர்களான என்விடியா (NVIDIA) மற்றும் ஏஎம்டி (AMD) உள்ளிட்டவைகளுடனான போட்டியை பலப்படுத்தவே குறித்த பணி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், இந்த நடவடிக்கையை நடைமுறைப்படுத்தும் நிலையில் இன்டெல் நிறுவனம் சுமார் 18,000 பணியாளர்கள் தங்களது பணிகளை இழக்க நேரிட வாய்ப்புள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |