சந்தைக்கு வருகிறது ஆப்பிள் நிறுவனத்தின் புதுவரவு!
ஆப்பிள் (Apple iPhone) நிறுவனம் தனது புதிய மடிக்கும் தன்மை கொண்ட ஐபோன் கையடக் தொலைபேசிகளை 2026 இல் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந்தவகையில், ஆப்பிள் நிறுவனம் குறித்த கையடக் தொலைபேசிகளை தயாரிக்கும் யோசனை நிலையில் இருந்து முன்னேறியுள்தாகவும் அதற்கான கூறுகளை உருவாக்க ஆசியாவில் உள்ள உபகரணங்கள் வழங்குனர்களை அணுகியதாகவும் கூறப்படுகின்றது.
சாம்சங் நிறுவனம்
ஆனால் 2026 ஆம் ஆண்டில் மடிக்கும் ஐபோன்கள் மீது கவனம் செலுத்தும் முன்பு, ஆப்பிள் இந்த ஆண்டின் ஐபோன் 16 (iPhone 16 Series) இன் செயற்கை நுண்ணறிவு (AI) அம்சங்கள் மற்றும் புதிய கமராக்களில் கவனம் செலுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக 2025இல், மிகவும் மெல்லியத் தன்மைக் கொண்ட “ஐபோன் ஸ்லிம்“ (iPhone Slim) கையடக்க தொலைபேசிகளை தயாரிக்கவுள்ளதாக வதந்திகளும் பரவி வருகின்றன.
எது எவ்வாறு இருப்பினும், ஆப்பிள் நிறுவனம் முன்னெடுக்கவுள்ள இந்த புதிய முயற்சிகளை ஏற்கனவே சாம்சங் (Samsung), ஓப்போ (Oppo), மற்றும் கூகுள் பிக்சல் (Google Pixel) போன்ற பிரபலமான கையடக்க தொலைபேசி நிறுவனங்களும் மற்றும் பிற ஆன்ட்ரோய் (Android) கையடக்க தொலைபேசி நிறுவனங்களும் அறிமுகப்படுத்தி மக்கள் மத்தியிலும், சர்வதேச சந்தையிலும் பிரபல்யமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |