அதிகரிக்கும் போர் பதற்றம் : களத்தில் இறங்கியது அமெரிக்கா
ஈரானும்(iran), அதன் நட்பு நாடுகளும் இஸ்ரேலுக்கு விடுத்துள்ள எச்சரிக்கையால், இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போா் மத்திய கிழக்கு பிராந்திய போராக உருவெடுக்கக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், இஸ்ரேல்(israel) மீது ஈரானும் ஹிஸ்புல்லாவும் திங்கள்கிழமை(ஓக. 5) தாக்குதல் நடத்த ஆயத்தமாகியிருப்பதாக அமெரிக்கா(us) எச்சரித்துள்ளது.
இஸ்ரேல் பிரதமர் அவசர ஆலோசனை
போர்ப்பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஈரானின் தாக்குதல்களை எதிர்கொள்வது குறித்து பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு(benjamin netanyahu) அந்நாட்டின் முக்கிய உளவு அமைப்புகளான மொசாட் மற்றும் ஷின் பெட்டின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் யோவ் காலண்ட் மற்றும் அந்நாட்டின் பதுகாப்புப் படைத் தளபதி ஹெர்ஸி ஹலேவி ஆகியோரும் கலந்துகொண்டனர்.
அமெரிக்காவின் நகர்வு
இந்த நிலையில், ஜி7 அமைப்பைச் சேர்ந்த நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களை தொடர்புகொண்டு பேசியுள்ள அமெரிக்க வெளியுறவு செயலர் அண்டனி பிளிங்கன்(antony blinken), மத்திய கிழக்கு பிராந்திய கள நிலவரம் குறித்தும் போர் மூளாமல் இருப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை ஒருங்கிணைந்து முன்னெடுப்பது குறித்தும் ஆலோசித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |