சுதந்திரதின மேடையை படம் பிடித்த இருவர் பிடிபட்டனர்
Sri Lanka Police
Independence Day
Sri Lanka
By Sumithiran
75 ஐந்தாவது சுதந்திர வைபவத்திற்காக காலிமுகத்திடலில் நிர்மாணித்து வரும் மேடை உள்ளிட்ட இடங்களை படம் பிடித்துக் கொண்டிருந்த போராட்டக் குழுவினர் கைது செய்யப்பட்டு காவல்துறை பிணையில் விடுவிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
நேற்றிரவு 8..00 மணியளவில் குறித்த இடத்தை அனுமதியின்றி இருவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த போது, அங்கு குவிக்கப்பட்ட காவல்துறையினர் அவர்களைப் பிடித்து கோட்டை காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கொழும்பு மற்றும் காலி பிரதேசத்தை சேர்ந்தவர்கள்
இவர்கள் இருவரும் கொழும்பு மற்றும் காலி பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்த பின்னர் இருவரும் காவல்துறை பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து கோட்டை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


ரணிலின் கைதும் இந்தியாவின் மௌனத்திற்கான பின்புலமும் 12 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்