அதிரடியாக கைது செய்யப்பட்ட இரு காவல்துறை உத்தியோகத்தர்கள்
Sri Lanka Police
Matale
By Laksi
மாத்தளை - மஹாவெல காவல்நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவில் கடமையாற்றும் இரு காவல்துறை உத்தியோகத்தர்கள் இலஞ்ச ஊழல் ஒழிப்பு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போக்குவரத்து கடமையில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது நபர் ஒருவரிடம் 10,000 ரூபாவை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டிலேயே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
போக்குவரத்து கடமை
மேற்குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், போக்குவரத்து கடமையின் போது வருமான அனுமதிப்பத்திரம் மற்றும் காப்புறுதி சான்றிதழ் இன்றி வாகனம் செலுத்திய நபருக்கு அபராதப்பத்திரம் குறைந்த தொகையில் வழங்குவதாக கூறி இந்த இரண்டு காவல்துறை அதிகாரிகளும் 10,000 ரூபா இலஞ்சம் கோரியுள்ளனர்.
இந்நிலையில் குறித்த நபர் இலஞ்ச ஒழிப்பு திணைக்களத்தில் செய்த முறைப்பாட்டிற்கு அமைய இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி