கடமைநேரத்தில் மசாஜ் நிலையம் சென்ற இரண்டு காவலருக்கு ஏற்பட்ட நிலை
பேலியகொட பிரதேசத்திலுள்ள மசாஜ் நிலையமொன்றுக்கு சென்று பெண்களின் சேவையை பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டின் பேரில் பேலியகொட தலைமையக காவல் நிலையத்தில் கடமையாற்றும் இரண்டு காவலர்கள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டதாக சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த இரண்டு காவலர்கள் தொடர்பில் ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொண்டு களனி உதவி காவல்துறை அத்தியட்சகரால் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.
அனுமதியின்றி காவல் நிலையத்திலிருந்து வெளியேறியவர்கள்
இந்த இரண்டு காவலர்களும் அனுமதியின்றி காவல் நிலையத்திலிருந்து வெளியேறி இந்த மசாஜ் மையத்திற்கு சென்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
காவல்துறை 119 அவசர பிரிவினருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் பேலியகொட தலைமையக அதிகாரிகள் குழுவொன்று மசாஜ் நிலையத்தை சுற்றிவளைத்த போது இரண்டு பெண்களின் சேவையைப் பெற்றுக் கொள்வதாகக் கூறப்பட்ட இரண்டு கான்ஸ்டபிள்களும் தப்பிச் சென்றுள்ளதாக சிரேஷ்ட காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.
தப்பி ஓடிய காவலர்கள்
தப்பி ஓடிய இரண்டு காவலர்களும் பின்னர் காவல் நிலையத்திற்கு திரும்பிச் சென்றதாகவும் காவல்துறை வட்டாரங்களிலிருந்து அறியப்படுகிறது.
