அவுஸ்திரேலிய 19 வயதுக்குட்பட்ட உலககிண்ண அணியில் இடம்பிடித்த இலங்கை வம்சாவளி நட்சத்திரங்கள்
அவுஸ்திரேலியா ICC U19 உலகக் கோப்பை 2026க்கான அணியை அறிவித்துள்ளது.இந்த அணியில் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த நிதேஷ் சாமுவேல்(Nitesh Samuel) மற்றும் நாடன் கூரே(Naden Cooray) இருவரும் இணைக்கப்பட்டுள்ளனர்.
19 வயதுக்குட்பட்ட தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் அவர்கள் இருவரும் உலக்கிண்ண போட்டி அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.
திறமையான வீரர்கள்
சாமுவேல் 91 சராசரியில் 364 ஓட்டங்களுடன் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார். அதே நேரத்தில் கூரே சகலதுறை திறமைகளால் ஈர்க்கப்பட்டார்.

பல்வேறு திறமைகளைக் கொண்ட இந்த அணி, ஜனவரி 16 அன்று விண்ட்ஹோக்கில் அயர்லாந்துக்கு எதிரான தனது போட்டியைத் தொடங்குகிறது. ஜனவரி 23 அன்று இலங்கைக்கு எதிராக அடுத்த போட்டியில் மோதவுள்ளது.
இந்த அணியில் இந்திய வம்சாவளி வீரர்களான ஆர்யன் சர்மா மற்றும் ஜோன் ஜேம்ஸ் ஆகிய இரண்டு வீரர்களும் இடம்பிடித்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |