சர்வதேச பாடசாலையொன்றில் நிகழ்ந்த அனர்த்தம் : மாணவர்கள் இருவர் வைத்தியசாலையில்
Kandy
Sri Lanka
Hospitals in Sri Lanka
By Sumithiran
ஐந்தாம் தர மாணவர்கள் இருவர் மின்விசிறி விழுந்ததில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கண்டி, அஸ்கிரியவில் உள்ள சர்வதேச பாடசாலையொன்றில் நேற்று(22) பாடசாலை நேரத்தின் போது இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
கண்டி பொது வைத்தியசாலையில் அனுமதி
காயமடைந்த மாணவர்கள் இருவரும் கண்டி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரு மாணவனின் கண்ணிலும் மற்றைய மாணவனின் தலையிலும் காயம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மின்விசிறி மின்வயர்களில் சிக்கி, ஊசலாடுவதாக பெற்றோர் கூறியுள்ளனர்.
மாணவர்களுக்கு ஏற்படவுள்ள ஆபத்து குறித்து
மாணவர்களுக்கு ஏற்படவுள்ள ஆபத்து குறித்து பள்ளி நிர்வாகத்திடம் தெரிவித்தும் மின்விசிறியை சரி செய்ய யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை.
மேலும் பாடசாலையின் மாதாந்திர கட்டணமும் ரூ.5 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக பெற்றோர்கள் தெரிவித்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம் 5 மணி நேரம் முன்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி