நிலவில் தொடருந்து போக்குவரத்தை நிகழ்த்த உத்தேசம்! ஒப்பந்தமிட்ட நாடு எது தெரியுமா
அமெரிக்கா நிலவில் தொடருந்து போக்குவரத்து அமைப்பை உருவாக்க ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவில் மேம்பட்ட தொழில்நுட்பத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு உருவாக்கப்பட்ட அமைப்பான DARPA இந்த திட்டத்தை முன்மொழிந்துள்ளது.
அப்பல்லோ திட்டத்தின் மூலம் மனிதரை நிலவுக்கு கொண்டு செல்ல உதவிய பல தொழில்நுட்பங்களின் உந்து சக்தியாக இந்த DARPA அமைப்பு விளங்கியுள்ளது.
பொருட்கள் மற்றும் வளங்கள்
DARPA அமைப்பானது தற்போது அதன் முன்னேற்ற கட்டப் பணியாக நோர்த்ரோப் க்ரம்மன் எனும் நிறுவனத்துடன் இணைந்து நிலவில் தொடருந்து போக்குவரத்து அமைப்பை உருவாக்குவதற்கான ஒரு கருத்தை உருவாக்குவதற்கும், அதை முன்னெடுத்து செல்லவும் ஒப்பந்தம் செய்துள்ளது.
இத்திட்டத்தின் மூலம் மனிதர்கள், பொருட்கள் மற்றும் வளங்களை சந்திர மேற்பரப்பின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்ல பயன்படுத்தலாம் என அமெரிக்கா கூறியுள்ளது.
அத்துடன் வளர்ந்து வரும் அமெரிக்காவின் விண்வெளி பொருளாதாரத்திற்கு இதன் மூலமாக பங்களிக்க முடியும் எனவும், இதற்காக நோர்த்ரோப் க்ரம்மன் நிறுவனம் புதிய ஆய்வை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
செலவு
இந்நிலையில் தற்போது நிலவில் தொடருந்து போக்குவரத்து அமைப்பு உருவாக்க தேவையான இடைமுகங்கள் மற்றும் வளங்களை வரையறுக்க தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.
பின்னர், அதன் எதிர்பார்க்கக்கூடிய செலவு, தொழில்நுட்ப மற்றும் தளவாட அபாயங்களின் பட்டியலையும் அந்நிறுவனம் தயார் செய்து வருவதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |