இந்திய திரைப்படப் பிரச்சார நிகழ்வொன்றில் பார்வையாளர்கள் மீது சரிந்து விழுந்த கம்பம்...!
நடிகர் யஷ் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படமொன்றின் பிரச்சார நிகழ்ச்சியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
குறித்த நிகழ்ச்சியில் ஒலிபெருக்கி மேடை கம்பம் சரிந்து விழுந்ததில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தில் சிக்கி இரு மாணவர்கள் மற்றும் ஒரு மாணவி என மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
தனியார் கல்லூரி
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், ஹைதராபாத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் குறித்த திரைப்படமொன்றின் பிரச்சார நிகழ்ச்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது மேடையில் நடிகர் யாஷ் பேசிக்கொண்டிருந்த போது, அவரைக் காண்பதற்காகச் சிலர் அங்கு அமைக்கப்பட்டிருந்த ஸ்பீக்கர் பாக்ஸ் வைக்கும் கம்பத்தில் ஏறியுள்ளனர்.

இதையடுத்து, அதிக பாரம் தாங்காமல் அந்த இரும்புக் கம்பம் திடீரெனச் சரிந்து விழுந்து விபத்து சம்பவித்துள்ளது.
இந்த விபத்தில் இரு மாணவர்களுக்குக் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதுடன் மேலும் ஒரு மாணவி காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 7