யாழில் T-56 ரக துப்பாக்கி தோட்டாக்களுடன் இருவர் கைது
Sri Lanka Police
Jaffna
Sri Lanka Police Investigation
Crime
By Thulsi
யாழில் T-56 ரக துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 96 தோட்டாக்களுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை யாழ்ப்பாணம் - கொடிகாமம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட மிருசுவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் எழுதுமட்டுவாள் பகுதியைச் சேர்ந்த 30 மற்றும் 31 வயதுடையவர்கள் எனப் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
41 சிறுவர்களின் எலும்புக்கூடுகள்: ராஜ் சோமதேவவின் செம்மணி அறிக்கை..! நாடாளுமன்றில் அமைச்சரின் அறிவிப்பு
மேலதிக விசாரணை
கொடிகாமம் காவல் நிலைய அதிகாரிகள் குழுவொன்றுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய, நேற்று (22) மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது மோட்டார் சைக்கிளொன்றை வழிமறித்துச் சோதனையிட்ட போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கொடிகாமம் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
5ம் ஆண்டு நினைவஞ்சலி