பாரிய குற்றச்செயல்கள் : வெளிநாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்ட இரண்டு இலங்கையர்கள்

CID - Sri Lanka Police Sri Lanka United Arab Emirates
By Jaso Sep 03, 2026 11:10 AM GMT
Report

  போதைப்பொருள், சட்டவிரோத துப்பாக்கி வைத்திருத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பான விசாரணைகளுக்காகத் தேடப்பட்டு வந்த இரண்டு இலங்கை சந்தேக நபர்கள் அபுதாபியிலிருந்து நாடு கடத்தப்பட்டு இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

ஐக்கிய அரபு அமீரகத்தைத் தாக்குவதற்கு ஈரான் பயன்படுத்திய ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகள், இலக்குகளைத் தாக்கி வெடிக்கும் காட்சிகள் உள்ளிட்ட காணொளிகளைத் தங்கள் கைபேசிகளில் சேமித்து வைத்திருந்ததை அடுத்து, அந்த இரண்டு சந்தேக நபர்களும் ஐக்கிய அரபு அமீரகப் பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

பாரிய குற்றச்செயல்கள்

 சந்தேக நபர்களில் ஒருவர், அசோகபுர, துங்கன்னாவாவைச் சேர்ந்த 37 வயதான திஸ்ஸநாயக்க முதியான்சலாகே பந்துல திஸ்ஸநாயக்க என அடையாளம் காணப்பட்டுள்ளார். போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் மற்றும் சட்டவிரோத துப்பாக்கி வைத்திருத்தல் தொடர்பாக அவர் இலங்கையில் தேடப்பட்டு வருகிறார்.

பாரிய குற்றச்செயல்கள் : வெளிநாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்ட இரண்டு இலங்கையர்கள் | Two Suspects Deported From Abu Dhabi

 இரண்டாவது சந்தேக நபர், கொழும்பு, பொரெள்ள பகுதியைச் சேர்ந்த 36 வயதான சியம்பலாடுவ பாதிரனலகே ஹர்ஷ குமார ஆவார். இவர் பரேவி சுதாவின் நெருங்கிய கூட்டாளி என்றும், பூசா சிறைச்சாலையில் நடந்த கலவரம் தொடர்பாகவும் தேடப்பட்டு வருகிறார் என்றும் கூறப்படுகிறது.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையான நாடாளுமன்ற அதிகாரிகள்!

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையான நாடாளுமன்ற அதிகாரிகள்!

கட்டுநாயக்காவில் தரையிறங்கிய சந்தேக நபர்கள்

  அபுதாபியிலிருந்து நாடு கடத்தப்பட்ட பின்னர், இவ்விரு சந்தேக நபர்களும் செப்டம்பர் இன்று( 3 ) காலை சுமார் 10.15 மணியளவில் எதிஹாட் ஏர்வேஸ் விமானம் EY392 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்தனர்.

பாரிய குற்றச்செயல்கள் : வெளிநாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்ட இரண்டு இலங்கையர்கள் | Two Suspects Deported From Abu Dhabi

குற்றப் புலனாய்வுத் துறை (CID) அதிகாரிகள் விமான நிலையத்தில் இவ்விரு சந்தேக நபர்களையும் கைது செய்து, அவர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்தனர்.

பின்னர், பந்துல திசாநாயக்க கொழும்பு பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவிற்கும், ஹர்ஷ குமார மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு தெற்குப் பிரிவு குற்றப் புலனாய்வுத் துறைக்கும் பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டனர். 

கெஹெல்பத்தர பத்மேவிற்கு தொடரும் விளக்கமறியல் : நீதிமன்றம் உத்தரவு

கெஹெல்பத்தர பத்மேவிற்கு தொடரும் விளக்கமறியல் : நீதிமன்றம் உத்தரவு

images credit daily mirror

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, கந்தரோடை

19 Oct, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, Ilford, United Kingdom

19 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், கொழும்பு, இத்தாலி, Italy, சுவிஸ், Switzerland

12 Nov, 2021
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மன்னார், Chavakacheri, புலோலி, Lewisham, United Kingdom

03 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பேர்லின், Germany, Wesel, Germany

12 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், உக்குளாங்குளம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024