வத்தளையில் துப்பாக்கிசூடு நடத்திவிட்டு இந்தியாவிற்கு தப்பிச் சென்றவர்களுக்கு நேர்ந்த கதி
ஜூலை 23 ஆம் திகதி இரவு வத்தளையில் உள்ள ஒரு ஹோட்டலில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவில் புகுந்து, துப்பாக்கிச் சூடு நடத்தி ஒருவரைக் கொன்றுவிட்டு இந்தியாவுக்குத் தப்பிச் சென்ற இரண்டு சந்தேக நபர்கள் இன்று (13) கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர். இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, இருவரும் படகு மூலம் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றனர்.
அங்கு, அந்நாட்டின் பாதுகாப்புப் படைகள் இவர்களை கைது செய்து இலங்கைக்கு நாடு கடத்தின. வத்தளையைச் சேர்ந்த இருவரில் ஒருவர் 30 வயதுடையவர், மற்றவர் 34 வயதுடையவர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது
அவர்கள் சென்னையிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பப்பட்டிருந்தனர். இதுகுறித்து இந்தியப் பாதுகாப்புப் படைகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்திருந்தன.

அதன்படி, இரண்டு சந்தேக நபர்களை ஏற்றிச் சென்ற விமானம் கட்டுநாயக்க வந்தடைந்ததும், அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னர், மேலதிக விசாரணைக்காக இரு சந்தேக நபர்களையும் பலத்த பாதுகாப்புடன் மேற்கு மாகாண வடக்கு குற்றப் பிரிவுக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |