இந்தோனேசியாவில் இரு தொடருந்துகள் மோதி விபத்து : மூவர் பலி
Indonesia
By Sathangani
இந்தோனேசியாவின் முக்கியமான தீவுகளில் ஒன்றான ஜாவாவில் இன்று (05) இரண்டு தொடருந்துகள் மோதியதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தோனேசிய தலைநகரின் கிழக்கு மாகாணமான சுரபயாவில் இருந்து பாண்டுங் நோக்கி சென்ற தொடருந்து சிகாலெங்காவில் இருந்து படாலராங் நோக்கி சென்ற பயணிகள் தொடருந்தின் மீது பயங்கரமாக மோதியது.
3 பேர் பலி 28 பேர் காயம்
இந்த தொடருந்து விபத்து மேற்கு ஜாவாவின் பாண்டுங் நகரில் உள்ள சிகாலெங்கா தொடருந்து நிலையத்தில் இருந்து சுமார் 500 மீற்றர் தூரத்தில் ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் பல பெட்டிகள் தடம்புரண்டதுடன் 3 பேர் உயிரிழந்த நிலையில், 28 பேர் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை குறித்த பகுதியில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி