புத்தளத்தில் மரங்கள் வீழ்ந்து இரு பெண்கள் பரிதாபகரமாக உயிரிழப்பு
சீரற்ற காலநிலை நிலை காரணமாக புத்தளம் (Puttalam) - மாரவில மற்றும் மாதம்பைப் பகுதிகளில் வீதியோரத்தில் இருந்த இரண்டு பெரிய மரங்கள் வீழ்ந்ததில் பெண்கள் இருவர் உயிரிழந்துள்ளதுடன், ஆண் ஒருவர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மாரவில - பிலாகமுல்ல பிரதேசத்தில் வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றின் மீது பாரிய மரமொன்று வீழ்ந்ததில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலதிக விசாரணை
புத்தளம் , நாத்தாண்டிய - உடுவல வீதியின் முட்டிபெதிவில பகுதியைச் சேர்ந்த யடவரகே தொன் ஹன்சி இஷாரா (வயது 36) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, மாதம்பை குளியாபிட்டிய வீதியின் சுதுவெல்ல பிரதேசத்தில் மரமொன்று வீழ்ந்ததில் வீதியில் பயணித்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
தும்லசூரிய - உடலவெல பகுதியைச் சேர்ந்த நிசன்சலா சரோஜனி (வயது 38) என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மாரவில மற்றும் மாதம்பை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |