தனிமையில் வாழ்ந்த முதியவர் தடியால் அடித்து படுகொலை
Sri Lanka Police
Colombo
Sri Lanka Police Investigation
By Jaso
கொழும்பு 13(colombo), ஜம்பெட்டா வீதியிலுள்ள தனது இல்லத்தில் வாழ்ந்து வந்த 67 வயதுடைய நபர் ஒருவர் தடியால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
காவல்துறைக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், உயிரிழந்த நபர் தனது வீட்டில் தனியாக வசித்து வந்ததாகவும், அவர் டி ஜெஸ்டின் பெர்னாண்டோ(De Jestine Fernando)என அடையாளம் காணப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
காயங்களுடன் கண்டெடுக்கப்பட்ட உடல்
அவரது வீட்டில் காயங்களுடன் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.

இனந்தெரியாத ஒருவர் வீட்டினுள் நுழைந்து தடியால் தாக்கி முதியவரை கொலை செய்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |