நீராடச் சென்ற இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி பலி
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Death
By Thulsi
கால்வாய் ஒன்றில் நீராடச் சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த துயர சம்பவம் கொஸ்கம - தாவல்கொட பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர்கள் 16 மற்றும் 17 வயதுடைய இரண்டு இளைஞர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணை
உயிரிழந்த இருவரின் உடல்களும் கொஸ்கம, சாலாவ பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை சடலங்கள் மீதான மரண விசாரணை மற்றும் பிரேத பரிசோதனை அவிசாவளை மாவட்ட பொது வைத்தியசாலையில் நடைபெறவுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
5ம் ஆண்டு நினைவஞ்சலி