யாழில் போதைப்பொருளுடன் இளைஞர்கள் இருவர் அதிரடி கைது
யாழ்ப்பாணத்தின் இரு வேறு பகுதிகளில் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் 2.5 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
போதைப்பொருளினை பயன்படுத்துவோருக்கு பகிர்ந்தளிக்கும் வகையில் செயற்பட்டு வந்த 27 வயதுடைய குறித்த இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்றில் முன்னிலைப்படுத்தல்
குருநகர் காவல்துறை பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன் நல்லூர் அரசடிப்பகுதியில் 570 மில்லிகிராம் ஹெரோயினுடன் விற்பனையில் ஈடுபட்ட 24 வயதுடைய மற்றுமொரு இளைஞனும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர்கள் இருவரையும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |