மானிப்பாய், நல்லூர் பகுதி இளைஞர்கள் இருவர் நெல்லியடியில் கைது
Sri Lanka Police
Jaffna
Sri Lanka Magistrate Court
By Sumithiran
யாழ்.நெல்லியடி - இமையாணன் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் வைத்து ஹெரோயின் போதைப் பொருளுடன் இரு இளைஞர்கள் நெல்லியடி காவல் நிலைய விசேட புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மானிப்பாய் மற்றும் நல்லூர் பிரதேசங்களை சேர்ந்த 24, 27 வயதான இரு இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் மீட்பு
இவர்களிடமிருந்து சுமார் 63 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
இவர்களை நாளை பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் முற்ப்படுத்தவுள்ளதாக கூறியுள்ள நெல்லியடி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


புத்திர சோகத்தில் ஈழ அன்னையர்கள்... இன்று அன்னையர் தினம்…
2 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி